வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 8 டிசம்பர் 2018 (15:43 IST)

கண்மூடித்தனமாக கூகுள் மேப்பை நம்பி... பள்ளத்தில் விழுந்த நண்பர்கள்!

கூகுள் மேப் காட்டும் வழியை பின்பற்றி வந்த போது எதிர்பாராத விதமாக 30 அடி ஆழ பள்ளத்தில் காரை விட்டு விபத்துகுள்ளாக்கி தண்ணீரில் தத்தளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
3 இளைஞர்கள் திருச்சூரில் இருந்து மூணாறு புறப்பட்டனர். மூணாறுக்கு செல்ல வழி தெரியததால் கூகுள் மேப்பின் வழிகாட்டுதலின்படி சென்றுள்ளனர். இரவு நேரம் என்பதால் சாரை சற்று வேகமாக இயக்கியுள்ளனர். 
 
அப்போது பாலமட்டம் - அவழிச்சல் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் பெரும் பள்ளம் இருப்பதை கண்டு காரை நிறுத்த முயன்றனர். ஆனால், கட்டுப்பாட்டை மீறி கார் 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. 
அந்த பள்ளத்தில் 8 அடி அளவிற்கு தண்ணீரும் இருந்துள்ளது. இதனால் மூவரும் காரின் மேற்பகுதியை பிடித்தபடி உதவிக்கேட்டு கூச்சலிட்டுள்ளனர். நல்லவேளையாக அந்த வழியாக வந்த ரப்பர் தோட்ட தொழிலாளிகள் கூச்சல் சத்தம் கேட்டு அவர்களை காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் அங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
திருச்சூர் - மூணாறு செல்ல கூகுள் மேப்பில் வழி தேடினால் இந்த பாதைதான் வருகிறது. ஆனால் இங்கு 30 அடி ஆழ பள்ளம் இருப்பது உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே தெரியும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.