Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2 சிறுமிகள் தொடர்ந்து 6 மாதம் பலாத்காரம்: காமுகனின் வேட்டை முடிவுக்கு வந்தது!

2 சிறுமிகள் தொடர்ந்து 6 மாதம் பலாத்காரம்: காமுகனின் வேட்டை முடிவுக்கு வந்தது!


Caston| Last Updated: திங்கள், 26 டிசம்பர் 2016 (17:19 IST)
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 2 சிறுமிகளை தொடர்ந்து ஆறு மாதம் கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த காமுகனை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 
 
துளசிராம் என்பவர் கால் டாக்ஸியில் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு விடும் வேலையை செய்து வந்துள்ளார். அதில் 8 மற்றும் 9 வயதுள்ள இரண்டு சிறுமிகளை துளசிராம் காருக்குள்ளே வைத்து பலாத்காரம் செய்துள்ளான்.
 
சில நேரங்களில் பள்ளிக்கு கொண்டு செல்லாமல் வேறு இடங்களுக்கு அந்த சிறுமிகளை கொண்டு சென்று பலாத்காரம் செய்து வந்துள்ளான். தொடர்ந்து ஆறு மாதங்கள் இந்த கொடூர செயலை துளசிராம் செய்து வந்துள்ளார்.
 
சிறுமிகள் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருப்பதை கவனித்த ஆசிரியர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் சொல்ல இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து சிறுமிகளின் பெற்றோர்கள் காவல்துறையிடம் துளசிராம் குறித்து புகார் அளித்துள்ளனர்.
 
இந்த புகாரின் அடிப்படையில் துளசிராமை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :