வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sivalingam
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2017 (05:41 IST)

ஸ்டேட் வங்கியுடன் இணைகிறது 5 வங்கிகள். மத்திய மந்திரிசபை ஒப்புதல்

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியுடன்ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய வங்கிகள் இணைகிறது. இதுவரை ஸ்டேட் வங்கியின் கிளை வங்கிகளாக இருந்த இந்த வங்கிகளை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.



இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்த இணைப்பின் மூலம் ஸ்டேங் வங்கி ஆக்கப்பூர்வாக செயல்படும் என்றும், ஸ்டேட்  வங்கியுடன் கிளை வங்கிகள் இணைவதால் அதன் கிளைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்றும் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் ஸ்டேட் வங்கிக்கு 16,500 கிளைகள் உள்ளன. இதில் 191 கிளைகள் வெளிநாடுகளில் உள்ளன. இந்த நிலையில் மேற்கண்ட ஐந்து வங்கிகள் இணைப்பு மூலம் ஸ்டேட் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 22,500 ஆக உயரும். அதேபோல் இந்த வங்கியின் ஏடிஎம்-களின் எண்ணிக்கை 58 ஆயிரமாக அதிகரிக்கும். இது ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதியாக அமையும்