Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இனிமேல் ஊதியத்தை பணமாக வாங்க முடியாது! - அவசரச் சட்டம்

புதன், 21 டிசம்பர் 2016 (18:21 IST)

Widgets Magazine

தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கான ஊதியத்தை ரொக்கமாக வழங்குவதை தடை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


 

சில அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் கூட, தங்களது ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம் அளிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இதனால், அவர்களுக்கு முறையான ஊதியம், வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் காப்புறுதி நிதி, போனஸ் ஆகியவை கிடைப்பதில்லை.

இந்நிலையில், நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம் அளிப்பதை தடை செய்யும் அவசர சட்ட திருத்த மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக கொண்டு வந்துள்ளது.

இதன்படி தொழில், வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கான ஊதியத்தை மின்னணு முறையில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தவும், காசோலை மூலம் வழங்கவும் மட்டுமே முடியும்.

ஆனால், ஏற்கனவே பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பால், பொதுமக்கள் தினசரி தேவைகளுக்கு வங்கிகளில் நாள்கணக்கில் காத்திருக்கும் நிலையில், ஊதியமும் கைக்கு வராமல் செய்தால் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்று சிறு, குறு தொழிற்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வருத்ததோடு தெரிவிக்கின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலாவிற்கு எதிரான சசிகலா புஷ்பா வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு

சசிகலா புஷ்பாவின் புகார் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி அதிமுகவுக்கு ...

news

தொழிலதிபர் சேகர் ரெட்டி கைது - பீதியில் அமைச்சர்கள்

தொழிலதிபர் சேகர் ரெட்டியை சிபிஐ போலீசார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

news

2016 உலக செய்திகள்: செப்டம்பர், அக்டோபர் நிகழ்வுகள்!!

2016 ஆம் ஆண்டு அரங்கேறிய உலக நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் ...

news

மாத ஊதியம் பெறும் தீவிரவாதிகள்

இந்தியா காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் மாத ஊதியம் பெற்றுக்கொண்டு பயங்கரவாத செயல்களில் ...

Widgets Magazine Widgets Magazine