வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 15 மார்ச் 2017 (21:15 IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படியை உயர்த்தி அளிக்க மத்திய அமைச்சரவை சற்று முன்னர் ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





இதன்படி இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும், இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களூம்,  55.51 லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்களும் பயனடைவார்கள்.

மேலும், ஐஐடி சட்டத்திருத்த மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் ஐஐடியை நடத்தவும், நாடு முழுவதும் புதிய 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைக்கவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கவும், திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது