பேருந்துகளில் இனி பெண்களுக்கு இலவசம்.. மாநில முதல்வர் அதிரடி

Last Updated: வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (13:25 IST)
மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் அக்டோபர் மாதம் முதல், பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.

டெல்லியில் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் அக்டோபர் 29 ஆம் தேதியிலிருந்து டெல்லி போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் கூறியுள்ளார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. விரைவில் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :