1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : வியாழன், 10 ஜூலை 2014 (21:35 IST)

'ஸ்மார்ட் சிட்டி' பொன்னேரி; சென்னை - விசாகப்பட்டினம் பொருளாதார மண்டலம்

வட தமிழகத்தில் சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி, ஆந்திராவில் கிருஷ்ணாப்பட்டினம், கர்னாடகாவில் தும்கூர் பகுதிகள் 'ஸ்மார்ட் சிட்டி'யாக மேம்படுத்துவதற்கான 'மாஸ்டர் பிளான்' திட்டம் விரைவில் இறுதியாக்கப்படும். 
 
இந்த மூன்று நகரங்கள் சென்னை- பெங்களூரு தொழில் தடத்தில் அமைந்துள்ளது குறிபிடத்தக்கது.
 
2014 ஜூலை 10 அன்று தமது பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 
 
அதே போன்று சென்னை விசாகப்பட்டினம் பெங்களூரு - மும்பை பொருளாதார மண்டலத்திற்கான திட்டமும் இறுதியாக்கப்படும். இவை 20 தொழில் மையங்களைக் கொண்டிருக்கும்.