Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரதமர் மோடியால் திருமணத்தை நிறுத்திய மணமக்கள்!

பிரதமர் மோடியால் திருமணத்தை நிறுத்திய மணமக்கள்!


Caston| Last Modified புதன், 12 ஜூலை 2017 (13:31 IST)
பிரதமர் மோடி குறித்த விவாதத்தால் மணமகனுக்கும், மணமகளுக்கு இடையே வாக்குவாதம் வந்துள்ளது. இதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணத்தையே நிறுத்தியுள்ளனர்.

 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவருக்கும், அரசு பணியாளர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் குறித்து பேச இரு வீட்டாரும் அந்த பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் கூடினர்.
 
இரு வீட்டாரும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்த போது இந்தியாவின் பொருளாதாரா மந்த நிலை குறித்த விவாதம் தொடங்கியது. அப்போது நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலைக்கு பிரதமர் மோடி தான் காரணம் என மணமகள் காட்டமாக கூறினார். ஆனால் மணமகன் இதனை ஏற்கவில்லை. உலக பொருளாதார மந்தமே காரணம் என கூறினார்.
 
இருவருக்கும் இடையே விவாதம் காரசாரமாக செல்வதால் இரு வீட்டாரும் பயந்து போய் சமாதானம் செய்து வைக்க முயற்சித்தனர். ஆனால் அதனை கேட்காத அவர்கள் நிச்சயக்கப்பட்ட திருமணத்தை நிறுத்த சொன்னார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் வேறு வழியில்லாமல் திருமணத்தை நிறுத்தினர்.


இதில் மேலும் படிக்கவும் :