வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 18 ஜூலை 2014 (10:39 IST)

பிரேசிலில் இருந்து நாடு திரும்பினார் நரேந்திர மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள 5 நாள் பயணமாக பிரேசில் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி டெல்லி வந்தடைந்தார்.

பிரிக்ஸ் மாநாட்டில் ஆறு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிய வளர்ச்சி வங்கி ஒன்றை சீனாவின் ஷாங்காய் நகரில் அமைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வங்கிக்கு இந்தியா 6 ஆண்டுகளுக்கு தலைவராக நீடிப்பது என்ற அறிவிப்புக்குப் பிறகு, பிரேசில் அதிபர் டில்மா ரவுசப்-பை சந்தித்த பிரதமர் மோடி, பிரேசிலுடன் சுற்றுச்சூழல் மேம்பாட்டில் ஒத்துழைப்பு, விண்வெளி துறை உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டார்.

முன்னதாக, சீன அதிபர் க்சி ஜிங்பிங்-கை சந்தித்து, இரு நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காணும்படி வலியுறுத்தினார்.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினையும் சந்தித்து, தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணு உலையை பார்வையிட வருமாறு அழைப்பு விடுத்தார் நரேந்திர மோடி.

இந்நிலையில் 5 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரேசிலில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். வரும் வழியில் ஜெர்மனியில் உள்ள ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் நகரில் சிறிது நேரம் தங்கி ஓய்வு எடுத்தார்.

இந்திய குழுவினர் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் தொலைபேசி வழியாக பேசிய பிரதமர், அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெறவுள்ள இந்திய–ஜெர்மனி இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதன் பின்னர், பிராங்பர்ட் நகரில் இருந்து புறப்பட்ட பிரதமர், தனி விமானம் மூலம் பாதுகாப்பாக தலைநகர் புது டெல்லியை வந்தடைந்தார்.