Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்: குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்: குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்


Caston| Last Modified சனி, 29 ஜூலை 2017 (16:01 IST)
மத்திய பிரதேசம் மாநிலம் பார்வாணி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமியை அவரது பக்கத்து வீட்டில் உள்ள ஒரு 17 வயது சிறுவன் பலாத்காரம் செய்துள்ளான்.

 
 
இதனால் அந்த சிறுமி கர்ப்பமாக இந்த விவகாரம் சிறுமியின் வீட்டுக்கு தெரியவந்தது. இதனையடுத்து இதனை மறைத்து பக்கத்து ஊரில் உள்ள ஒருவருக்கு சிறுமியை அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர்.
 
அதன் பின்னர் சிறுமியை அவர்கள் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். இந்த நிலையில் சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இது சிறுமியின் கணவர் வீட்டுக்கு தெரிந்தால் தங்கள் மகளின் வாழ்க்கை கெட்டுவிடும் என கருதி, சிறுமியும் அவரது பெற்றோரும் குழந்தையை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.
 
இதனையடுத்து அவர்கள் அருகில் உள்ள காலி மைதானம் ஒன்றில் குழி தோண்டி பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தையை உயிரோடு வைத்து புதைத்துள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருக்கும் போது குழந்தை ஒன்று அழுவது போன்று சத்தம் கேட்டுள்ளது.
 
அவரகள் அருகே சென்று பார்த்த போது ஆண் குழந்தை ஒன்று மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் முகத்தில் காயங்களுடன் கதறியபடி இருந்துள்ளது. அந்த சிறுவர்கள் உடனடியாக அருகில் உள்ள கிராம மக்களிடம் இது குறித்து தெரிவித்தனர். கிராம மக்கள் உடனடியாக வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
 
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை சிறுமியை கண்டுபிடித்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் அந்த சிறுமியை கற்பழித்த 17 வயது சிறுவனையும் கைது செய்துள்ளனர்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :