வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 25 நவம்பர் 2014 (15:19 IST)

கறுப்புப் பண விவகாரம் குறித்த அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கூறி எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
 
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கியதும் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதாதளம், முதலிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
 
அமளிக்கு இடையே நடைபெற்ற நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, கறுப்புப் பணம், காப்பீடுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு, சிபிஐயின் நடவடிக்கை என்று பல்வேறு விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
 
இதைத் தொடர்நது, அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் கோஷம் எழுப்பியதால், நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.