1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 20 நவம்பர் 2014 (19:42 IST)

கருப்புப் பணம் குறித்து இந்தியா வெளியிட்டது, மூழ்கி உள்ள பனிப்பாறையின் முகப்பு தான் - ஜெனிவா வங்கி ஊழியர்

கருப்புப் பணம் குறித்து இந்தியா வெளியிட்டுள்ள தகவல், மூழ்கி உள்ள பனிப்பாறையின் முகப்பு மட்டும் தான் என்று ஜெனிவா வங்கி ஊழியர் தெரிவித்துள்ளார்.
 
கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில், முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் அந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நீதிமன்றத்தில் தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்து உள்ளது. 
 
இதற்கிடையில், ஜெனிவாவில் உள்ள எச்எஸ்பிசி வங்கி கிளையின் ஊழியராக பணிபுரிந்து வந்த பிரான்சை சேர்ந்த ஊழியர் ஹெர்வ் ஃபால்சியானி, சுவிஸ் வங்கியில் 1,30,000  கணக்கு வைத்திருப்பவர்களின் தகவல்களை எடுத்துள்ளார்.
 
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஹெர்வ் ஃபால்சியானி, "கருப்புப் பணம் குறித்து இந்தியா 1 சதவீத தகவல்களைத்தான் வெளியிட்டு உள்ளது. நான் அடுத்த நாடுகளுக்கு உதவி செய்து வருகிறேன்.  இந்தியாவுக்கும் உதவ நான் ஆர்வமாக இருக்கிறேன். 2011இல் பிரான்ஸ் கருப்பு பண கணக்குக்கள் வைத்திருப்புவர்களின் பட்டியலை இந்தியாவுடன் பிரான்ஸ் பகிர்ந்து கொண்டது. அது மூழ்கி உள்ள பனிப்பாறையின் முகப்பு மட்டும் தான் இந்தியா கேட்டுக் கொண்டால் நாங்கள் அது குறித்தத் திட்டத்தை அனுப்பத் தயாராக உள்ளோம்" என்று கூறியுள்ளார்.
 
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் மட்டும் 20 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் என்று சர்வதேச தன்னார்வ அமைப்பின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.