வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 12 டிசம்பர் 2018 (08:41 IST)

அரையிறுதிலேயே காணாமல் போனது பாஜக: மம்தா பானர்ஜி

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலை அந்தந்த மாநில சட்டசபை தேர்தலாக மட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோடியாகவே அனைவரும் கருதினர். இந்த தேர்தல் பாராளுமன்ற தேர்தல் என்ற ஃபைனலுக்கு முன் நடக்கும் செமி ஃபைனலாகவே கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்பட்ட நிலையில் மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது பாஜக.

பாஜக தோல்வி குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பகக்த்தில் தொடர்ந்து கருத்துகளை பதிவு செய்து வருகிறார். அதில் மக்கள், பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளதாகவும், இந்த வெற்றி மக்களின் வெற்றி என்றும் அநீதிக்கு எதிரான ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ளார்.

மேலும் பாஜக அரையிறுதி ஆட்டத்திலேயே காணாமல் போய் விட்டதாகவும், இந்த தேர்தலின் முடிவு 2019-ம் ஆண்டில் நடைபெற உள்ள இறுதி போட்டியின் முடிவு எப்படி அமையும் என்பதை தெரிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜியின் இந்த டுவீட்டுக்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.