வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 10 ஜூலை 2014 (11:59 IST)

பாஜக தலைவராகத் தேர்வான அமித் ஷாவுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து

பாஜக தேசியத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அமித் ஷாவுக்கு ராஜ்நாத் சிங் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவராக அமித் ஷா ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து அவருக்கு பாஜகவின் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவரது தலைமையில் பாஜக முன்னேற்றம் காணும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும், அவருக்கு நிர்வாகத் திறனும் ஒருங்கிணைப்புத் திறனும் அதிகம் என்பதால் பாஜக புதிய வளர்ச்சியை எட்டும் என்றும் அவர் தனது டிவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவராக இருந்த ராஜ்நாத்சிங், மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனால் பாஜகவின் தலைவர் பதவி காலியாக இருந்தது.

இந்தப் பதவிக்கு அமித்ஷா பெயர் சிபாரிசு செய்யப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களை கைப்பற்றியது.

இதற்கு மோடிக்கு மிகவும் நெருக்கமானவரும், குஜராத் முன்னாள் அமைச்சரருமான அமித் ஷாதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் அவரை பாஜக தேசிய தலைவராக நியமிக்க அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.