1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (15:07 IST)

பீஹாரில் வெற்றிபெற போவது பாஜகவா? நிதிஷ், லாலுவா? - கருத்துக் கணிப்பு வெளியீடு

பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
 

 
பீஹார் தேர்தல் வரும் 12ஆம் தேதி தொடங்கி, நவம்பர் மாதம் 5ஆம் வரை ஐந்து கட்டங்களாக நடைபெறவுள்ளது. அடுத்த மாதம் 8ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. மொத்தம், 243 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட பீஹாரில், நிதிஷ்குமார் தலைமையிலான அணியும், பாஜக தலைமையிலான மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.
 
இந்நிலையில் ஜீ 'டிவி' கடந்த மாத இறுதியில் கருத்துக்கணிப்பு நடத்தியது. போன் வாயிலாக, 35 ஆயிரம் வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. 
 
இதில், மொத்தமுள்ள தொகுதிகளில் 243 தொகுதிகளில், பாஜக கூட்டணி 147 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், முதல்வர் நிதிஷ் குமாரின் தலைமையிலான கூட்டணி 64 இடங்களை மட்டுமே பிடிக்கும் எனவும் கூறியுள்ளது.
 
இரு கூட்டணிகளுக்கும் இடையே, 32 தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும். இதனால் யார் வெற்றிபெறுவர் என்பதை கணிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.
 
மேலும், முஸ்லிம்களின் வாக்குகள் நிதிஷ் கூட்டணிக்கு 57.9 சதவீதமும், பாஜக கூட்டணிக்கு 35.9 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.