பாஜக எம்.பி. ரூபா கங்குலி மருத்துவமனையில் அனுமதி


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 23 டிசம்பர் 2016 (22:01 IST)
நடிகையும் எம்.பி.யுமான ரூபா கங்குலி முளையில் ரத்தக்கட்டு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 
பிரபல நடிகையான ரூபா கங்குலி 2015ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இனைந்தார். 2016ஆம் ஆண்டு மேற்வங்கம் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பிறகு பஜக கட்சியில் இருந்து நவ்ஜோத் சிங் விலகியதை அடுத்து ரூபா கங்குலி ராஜ்ய சபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். அதோடு தற்போது மேற்குவங்கம் பாஜக மகளிர் அணித்தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் இன்று அவருக்கு மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :