Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மருத்துவர்களை சரமாரியாக தாக்கிய பாஜக எம்பி (வீடியோ)


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 3 ஜனவரி 2017 (16:39 IST)
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் எம்பி ஆனந்த குமார் ஹெக்டே, மருத்துவர்களை தாக்கியது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

 

 
கர்நாடகாவின் கர்வார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாஜக எம்பி ஆனந்த குமார் ஹெக்டே தனியார் மருத்துவமனையில் அவரது தாயை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். மருத்துவர்கள் அவரது தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி, அங்கிருந்த 3 மருத்துவர்களை கடுமையாக தாக்கியுள்ளார்.
 
இதில் அந்த மூன்று மருத்துவர்களும் கடுமையாக தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளனர். தற்போது பாஜக எம்பி, மருத்துவர்களை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. காவல்துறையினர் பாஜக எம்பி மீது வழக்கு பதிவு செய்யவில்லை, இதையடுத்து மாவட்ட மருத்துவ சங்கம் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
 

நன்றி: ANI


இதில் மேலும் படிக்கவும் :