Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உ.பி. இடைத்தேர்தல் - பாஜகவிற்கு பின்னடைவு

Last Modified புதன், 14 மார்ச் 2018 (13:03 IST)
லோக்சபா இடைத் தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளிலும் பெரும் சரிவை சந்திதுள்ளது பாஜகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 
லோக்பூர் லோக்சபா உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத்,  உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால், உத்தரபிரதேசம் மாநில முதலமைச்சரானார். அதேபோல், பல்பூர் தொகுதி உறுப்பினராக இருந்த கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்வரானார். எனவே, அவர்கள் இருவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால், காலியாக இருந்த இரு தொகுதிகளுக்கும் கடந்த 11ம் தேதி தேர்தல் நடந்தது.
 
அந்த தொகுதிகளில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவியது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி கோரக்பூர் தொகுதில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் நிஷாத்தும், பல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங்கும் பாஜக வேட்பாளர்களை விட முன்னிலையில் உள்ளனர்.
 
தற்போது உ.பியில் முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத், கடந்த 5 தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதி கோரக்பூர். ஆனால், தற்போது அங்கு பாஜக தோல்வியை சந்தித்துள்ளது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :