வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2016 (12:57 IST)

கயிற்றில் சிக்கி தவித்த பறவைக்கு உதவிய பெங்களூரு மக்கள் : நெகிழ்ச்சி வீடியோ

பட்டம் விடும் கயிற்றில் கால்கள் கட்டப்பட்டு,  ஒரு மரக்கிளையில் சிக்கி தவித்த பறவையை பொதுமக்கள் விடுவித்து பறக்க வைத்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.


 

 
பெங்களூர் லால்பார்க் அருகே, ஒரு பறவை மரக்கிளையில் சிக்கி தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது. அதை பார்த்தவர்கள், அந்த பறவை இறந்துவிட்டது என்று நினைத்தனர். ஆனால் அந்த பறவை உயிரோடு இருந்ததை பார்த்த ஒரு இளைஞர், ஒரு பேருந்தை நிறுத்தி, அதன் மீது பறவையை விடுவிக்க முயற்சி செய்தார்.
 
அந்த பறவையின் காலில் பட்டம் விடும் நூல் சிக்கியிருந்தது. ஒரு வழியாக அந்த நூல் விடுவிக்கப்பட்டு, அந்த பறவை சுதந்திரமாக வானத்தில் சிறகடித்து பறந்தது.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..