1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2016 (06:41 IST)

சினிமா படத்தின் காட்சி நிஜமாகியுள்ளது: கோடீஸ்வரர் மகன் பேக்கரியில் வேலை பார்த்த சம்பவம்

6 ஆயிரம் கோடிக்கு சொந்தகாரர் ஷிவ்ஜி என்பவரின் மகன், தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒரு மாதம் காலம் தனியாக வேலை பார்த்து ரூ:4000 சம்பளம் பெற்றுள்ளார்.


 

 
குஜராத்தின் சூரத் நகரத்தை சேர்ந்த கோடீஸ்வரர் ஷிவ்ஜி தொல்லாக்கியா, ஒரு வைர வியாபாரி. இவர் 71 நாடுகளில் வைர தொழில் செய்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு 6 ஆயிரம் கோடி. இவரது 21 வயது மகன் தார்வயா அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்து முடித்துள்ளார்.
 
தார்வயா, வாழ்வின் கஷ்டங்களையும், வறுமையும், வேலை கிடைப்பதன் சிரமத்தை புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒருமாதம் தனியாக வேலை தேடி, அதை வைத்து பிழைத்துக்கொள்ள வேண்டும் என்று கேரளாவிற்கு அனுப்பி வைத்துள்ளார் தந்தை ஷிவ்ஜி.
 
பேக்கரி மற்றும் மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்டவைகளில் இருந்து ஒரு மாதத்தில் ரூ.4000 ஊதியமாக பெற்றுள்ளார்.
 
ஒருமாத காலத்தில் தான் கற்றுக்கொண்ட முக்கிய பாடம், ”மற்றவர்களிடம் கரிசனத்தோடு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். பெரும்பாலான நேரங்களில் மற்றவர்களிடம் நாம் கடினமாக நடந்து கொள்கிறோம்” என்று தார்வயா தெரிவித்துள்ளார்.