வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வியாழன், 28 ஏப்ரல் 2016 (16:23 IST)

பகலில் சமைச்சா ஜெயில் தண்டனை; இந்தியாவில் எங்கு தெரியுமா?

கடும் வெயிலால் ஏற்படும் தீ விபத்தை தடுப்பதற்காக, வீடுகளில் யாரும் பகல் வேளையில் சமையல் செய்யக்கூடாது என்று பீகார் அரசு அதிரடி உத்திரவு பிறப்பித்துள்ளது.


 

 
வட மாநிலங்களில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த இரு வாரங்களில் மட்டும் வெயிலுக்கு 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மனிதர்கள் மட்டுமின்றி வெயிலின் கொடுமைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் பலியாகிவிட்டன.
 
மேலும் பட இடங்களில் கடுமையான வெயில் காரணமாக தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் பெகுசாரி மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 குடிசைகள் எரிந்து சாம்பலாகி சாம்பலாகிவிட்டது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில், வெயிலின் காரணமாகத்தான் அந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
 
எனவே, இதை எப்படியாவது தடுக்க நினைத்த பீகார் அரசு, பகல் வேளையில் அதாவது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்கள் வீட்டில் சமையல் செய்ய வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மீறி சமைத்தால் இரண்டு வருடம் சிறை தண்டனை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமின்று, யாகம் வளர்ப்பது, தீ வளர்த்து மத சடங்குகள் செய்வது போன்ற விஷயங்களுக்கும் தடை விதித்துள்ளது பீகார் அரசு.
 
இந்த அறிவிப்பால், பீகார் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....