Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறைக்கு சென்ற சிறுவர், சிறுமி முகத்தில் சீல் வைத்த அதிகாரிகள் - விசாரணைக்கு உத்தரவு


Murugan| Last Updated: புதன், 9 ஆகஸ்ட் 2017 (12:28 IST)
சிறையில் உள்ள நெருங்கிய உறவினர் ஒருரை பார்க்க சென்ற ஒரு சிறுவர் மற்றும் சிறுமியின் முகத்தில் சிறை அதிகாரிகள் சீல் வைத்த விவகாரம் போபாலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
 
மத்திய பிரதேசம் போபால்  மத்திய சிறைசாலைக்கு, கடந்த 7ம் தேதி, ரக்‌ஷா பந்தனை கொண்டாடுவதற்காக, சிறையில் இருந்த ஒருவரின் நெருங்கிய உறவினர் மற்றும் அவரின் குழந்தைகள் சென்றனர். அப்போது,  குழந்தைகளின் முகங்களில் முத்திரை குத்தப்பட்டு சிறைக்குள் சென்றதற்கான பதிவை சில அதிகாரிகள் செய்துள்ளனர்.
 
இந்த விவகாரம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் மேலும் படிக்கவும் :