Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கட்டிப்பிடி, கல்யாணம் செய்: மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது!

கட்டிப்பிடி, கல்யாணம் செய்: மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது!


Caston| Last Modified வெள்ளி, 13 ஜனவரி 2017 (15:24 IST)
கட்டிப்பிடிக்க சொல்லியும், திருமணம் செய்துகொள்ளுமாறும் இளம்பெண் ஒருவரை சில்மிஷம் செய்த வாலிபரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
பெங்களூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த புத்தாண்டு தினத்தில் கொண்டாட்டத்தின் போது பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார்கள் எழுந்தது.
 
இந்நிலையில் சமீபத்தில் மணிகாந்தா என்ற இளைஞன் பெங்களூரு சதாசிவநகர் பகுதியில் கல்லூரி மாணவியிடம் தன்னை கட்டிப்பிடிக்கும் படியும் திருமணம் செய்துகொள் எனவும் வற்புறுத்தியுள்ளார். அவரிடம் இருந்த தப்பியோடிய அந்த பெண் நந்த நபரின் பைக் எண்ணுடன் போலீஸில் புகார் அளித்தார்.
 
இதனையடுத்து மணிகாந்தா என்ற அந்த இளைஞனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னர் இந்த நபர் பள்ளி சிறுமி ஒருவரிடமும் இதே போல கட்டிப்பிடிக்க சொல்லி சில்மிஷம் செய்துள்ளார்.
 
இதனையடுத்து அந்த சிறுமி கத்தி கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பியோடியுள்ளார் மணிகாந்தா. அப்போதும் மணிகாந்தாவின் பைக் நம்பருடன் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை போலீசார் தேடிக்கொண்டிருந்தனர். தற்போது கல்லூரி மாணவி கொடுத்த புகாரிலும் அதே பைக் நம்பர் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :