வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 29 நவம்பர் 2016 (19:02 IST)

வங்கிக்கு வந்த செல்லாத நோட்டுக்கள் எவ்வளவு? - இன்னும் 30 சதவீதம் வரவில்லை

செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்களில், இதுவரை 8 லட்சத்து 45 ஆயிரம் கோடி அளவிற்கான நோட்டுக்கள் வங்கிக்கு வந்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 

கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், அவற்றை டிசம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றியும், வங்கிகளில் டெபாசிட் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 18 நாட்களில் ரூ. 8 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதாவது 57 சதவீத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வங்கிக்கு வந்து விட்டதாகவும், இன்னும் 30 முதல் 33 சதவீத பணமே வரவேண்டியது என்றும் அது தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தியாவில் பழைய 500, 1000 நோட்டுக்கள் மொத்தம் 14 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புழக்கத்தில் இருந்தன.

இதில் ரூ. 33 ஆயிரத்து 948 கோடி மதிப்பிலான தொகை, பொதுமக்கள் நேரடியாக வங்கிகளில் கொடுத்து மாற்றியது என்றும், ரூ. 8 லட்சத்து 11 ஆயிரத்து 33 கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.