1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 28 அக்டோபர் 2017 (15:23 IST)

நாடு முழுவதும் மூடப்படும் ஏடிஎம் மையங்கள்; அடுத்த திட்டம்தான் என்ன?

டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்க தொடங்கியதை அடுத்து நாடு முழுவதும் 358 ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுவிட்டது.


 

 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு பணமதிப்பிழப்பு அமல்படுத்தியது. உயர்மதிப்பு மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு நாட்டு மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய ஊக்குவித்தது. 
 
அதன்படி பெரும்பாலான மக்கள் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். வங்கிகளும் ஏடிஎம்களில் குறிப்பிட்ட அளவுக்கு பணம் எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தன.
 
இதனால் தற்போது மக்கள் அதிகளவில் ஏடிஎம்யில் பணம் எடுப்பதை தவிர்த்து வருகின்றனர். இதனால் வங்கிகளுக்கு ஏடிஎம் மையங்களை நிர்வகிக்கும் செலவு அதிகரித்து விட்டது. எஸ்பிஐ, எச்டிஎஃப்சி உள்ளிட்ட பெரிய வங்கிகள் அதிக அளவிலான ஏடிஎம் மையங்களை மூடிவிட்டன.
 
கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை 358 ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளது. வங்கிகளின் இந்த திடீர் நடவடிக்கை மக்களுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வங்கிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைதான் என்ன? என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.