1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 1 ஜூலை 2015 (13:37 IST)

வங்கியில் ரூ. 25 கோடி பண மோசடி: பெண் எம்.பி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

வங்கியில் ரூ. 25 கோடி மோசடி செய்ததாக ஆந்திர பெண் எம்.பி. மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
 
ஆந்திரா மாநிலம் விசாகபட்டிணம் மாவட்டம் அரபு நாடாளுமன்ற தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. கொத்தபள்ளி கீதா.
 
இவர் எம்.பி. ஆன பிறகு தெலுங்கு தேசம் கட்சிக்கு சென்று விட்டார். இந்நிலையில் கொத்தபள்ளி கீதா எம்.பி., அவரது கணவர் ராம கோடீஸ்வர ராவ் ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் போலி பத்திரங்களை கொடுத்து ரூ. 25 கோடி கடன் வாங்கி மோசடி செய்தனர்.
 
இந்த மோசடிக்கு வங்கி அதிகாரிகள் அரவிந்தக்ஷன், ஜெயபிரகாஷ் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இந்த மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
 
இந்நிலையில், தற்போது இந்த வழக்குகளில் சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.  இந்த குற்றப்பத்திரிகையில் கொத்தபள்ளி கீதா எம்.பி., அவரது கணவர் ராம கோடீஸ்வர ராவ், வங்கி அதிகாரிகள் அரவிந்தக்ஷன், ஜெயபிரகாஷ், போலி பத்திரம் தயாரித்து கொடுத்த ராஜ்குமார் உள்பட 6 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
 
இந்த மோசடி மூலம் வங்கிக்கு ரூ. 42.79 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.