செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By caston
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (13:35 IST)

கள்ளக் காதல் விபரீதம்: காதலி மற்றும் அவருடைய மகளை கொன்ற வங்கி மேலாளர்

மேற்கு வங்கத்தில் ஒரு வங்கி மேலாளர் 34 வயது பெண் மற்றும் அவரது மகளை கொன்றதாக கைது செய்யப்பட்டார்.

சமரேஷ் சர்கார்(47) இந்திய மத்திய வங்கியின் துர்காபூர் கிளையின் மேலாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.  இவருக்கும்  கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சுஷேதா சக்ரவர்த்தி (34) என்ற பெண்ணுக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரை வற்புறுத்தியுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்படவே சர்க்கார் அந்த பெண்ணை  மூன்று துண்டுகளாக வெட்டி மூன்று பெட்டியில் அடைத்துள்ளார். இந்த நிலையில் சர்க்கார் 3 டிராலி பேக்குகளுடன் படகில் பயணம் செய்து ஆற்றில் தூக்கி வீசும் போது பயணிகள் அவரை பிடித்து போலீசில் ஓப்படைத்துள்ளனர்.

இதையடுத்து விரைந்த போலீஸார் பெண்ணின் இரண்டு துண்டுகள் அடங்கிய  பெட்டியை கண்டுபித்துள்ளோம், மூன்றாவது பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக  தெரிவித்தனர்.

விசாரணையில் தனக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே உறவு இருந்ததை ஒப்புக்கொண்ட சர்க்கார், அந்த பெண் தன்னுடைய மகளை  கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். தான் அவளை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதற்காக  அவள் தனது மகளை தண்ணீரில் மூழ்கடித்து சாகடித்ததாகவும் பின்னர் கத்தியால் தனது கழுத்தில் வெட்டி தற்கொலை செய்ததாக கூறினார். ஆனால் அவர் கூறுவது நம்பும்படி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் சர்கார் குற்றத்திற்கான ஆதாரங்களை அழிக்க கூடும் என்பதால் கொலை குற்றச்சாட்டு மற்றும் இந்திய சட்ட பிரிவு  201ன் கீழ் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.