Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பத்மாவதி படத்திற்கு மத்திய பிரதேசம், பஞ்சாப் அரசுகள் தடை...

Murugan| Last Updated: திங்கள், 20 நவம்பர் 2017 (21:12 IST)
இயக்குனர் சஞ்சய் பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி படத்திற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் இப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 


 

பத்மாவதி படம் ராணி ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி  பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படத்தை எதிர்த்து சில அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளதால், பத்மாவதி ரிலீஸ் தேதி ஒத்தி  வைக்கப்பட்டுள்ளது. 
 
அகில பாரதிய ஷத்ரிய மகாசபா அமைப்பு ஞாயிற்றுக்கிழமை உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது. மகாசபாவின்  இளைஞர் அணி தலைவர் புவனேஸ்வர் சிங் கூறியதாவது, தீபிகாவை உயிருடன் எரிக்கும் நபருக்கு ரூ. 1 கோடி பரிசு  அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.  
 
முன்னதாக தீபிகாவின் தலையை வெட்டி எடுத்து வருபவருக்கு ரூ. 5 கோடி பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் பத்மாவதி திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் என அறிவித்துள்ளார். அதேபோல், பஞ்சாப் மாநிலம் முதல்வர் அமரீந்தர் சிங்கும் இப்படத்திற்கு தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
 
இந்த விவகாரம் இப்படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :