வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: சனி, 18 அக்டோபர் 2014 (14:21 IST)

ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கியதை அடுத்து, இதற்கான உத்தரவு நகல் மற்றும் தனிநபர் உத்தரவாதம் உள்ளிட்ட ஆவணங்கள், பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டன. 
 
ஜெயலலிதாவுக்குப் பரத் மற்றும் குணஜோதி ஆகியோர், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முறையே ரூ.5 கோடி மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களைப் பிணையமாக அளித்தனர். இது போல் சசிகலாவுக்கு ராஜீவ், லட்சுமிபதி ஆகிய இருவரும், இளவரசிக்கு, புகழேந்தி, ராஜேந்திரன் என்ற இருவரும், சுதாகரனுக்கு லோகேஷ், அன்பாம்பாள் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் தனிநபர் உத்தரவாதம் அளித்தனர். 
 
ஆவணங்களைப் பரிசீலித்த நீதிபதி குன்ஹா, இவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறீர்களா? நீதிமன்ற உத்தரவை மீறினாலோ, குற்றவாளி வேறு எங்கும் ஓடினாலோ உங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யலாமா என்றும் கேட்டார். அதற்கு அவர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். 
 
இதனையடுத்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் ஜாமினில் வெளியேற நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவின் நகல், பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மதியம் 1. 30க்கு மேல் 3 மணிவரை எமகண்டம் என்பதால் ஜெயலலிதா, 3 மணிக்கு மேல் சிறையிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.