1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (23:41 IST)

400க்கும் மேற்பட்ட இந்திய முதலைகள் வரி ஏய்பு - பஹாமாஸ் தீவுகளில் முதலீடு என தகவல்கள்

பஹாமாஸ் தீவுகளில் 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் முதலீடு செய்துள்ளதாக அவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது.
 

 
கடந்த ஏப்ரல் மாதம், வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்களின் சர்வதேச கூட்டியக்கம் ஞாயிற்றுக்கிழமை ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.
 
11.5 மில்லியன் தகவல் தரவுகளை கொண்ட இந்தப் புலனாய்வில் 140 அரசியல் புள்ளிகளின் வரி ஏய்ப்பு, பண பதுக்கல் அம்பலமாகி இருக்கிறது. இந்த 140 அரசியல் பிரபலங்களில் 12 பேர் இந்நாள், முன்னாள் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்:
 
இந்த ஆவணங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள் குழுவில் இந்தியாவின் சார்பில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர்களும் இடம் பெற்றிருந்தனர்.
 
பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். உரிமையாளர் கே.பி.சிங், டி.எல்.எப்., நிறுவனத் தலைவர் குஷண் பால்சிங், 2ஜி புகழ்நீரா ராடியா, மோடிக்கு நெருக்கமான அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி ஆகியோர் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை தெரிவித்து இருந்தது.
 
பஹாமஸ் தீவுகளில் 400க்கும் இந்தியர்கள் முதலீடு:
 
இந்நிலையில் அட்லாண்டிக் கடல் பகுதியி்ல் கியூபாவிற்கு வடக்கே உள்ள பஹாமாஸ் தீவுகள் என்ற நாட்டில், பல்வேறு துறைகளில் முதலீடுகள் செய்துள்ளதாக 500 இந்தியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது.
 
இதுதொடர்பாக ஜெர்மனியில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளியான ஆதாரங்களை வைத்து, இந்தியாவில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
 
பஹாமாஸ் தீவுகள் நாட்டில் சுரங்கங்கள், மின்னணு சாதன உற்பத்தி ஆலைகள், ரியல் எஸ்டேட், ஊடகம், பொழுதுபோக்கு ஆகிய பல்வேறு துறைகளில் 1 லட்சத்து 75 ஆயிரம் நிறுவனங்களில் 475 இந்தியர்கள் பெருமளவு முதலீடு செய்துள்ளனர்.
 
இவர்களில் பானாமா பேப்பர்ஸ் மோசடி பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களும் அடங்குவர். குறிப்பாக வேதாந்தா குழும நிறுவனர் அனில் அகர்வால், பேஷன் டிவி மேம்பட்டாளர் அமன் குப்தா உள்ளிட்டோர் அடங்குவர்.
 
ஏற்கனவே பனாமா பேப்பர்ஸ் மோசடி விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். அதன் அறிக்கை வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது பஹாமாஸ் மோசடி விவகாரம் அம்பலத்திற்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.