Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிறந்த குழந்தையின் வயிற்றில் குழந்தை: அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

பிறந்த குழந்தையின் வயிற்றில் குழந்தை: அதிர்ச்சியில் மருத்துவர்கள்!


Caston| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (12:01 IST)
மும்பையில் பிறந்த குழந்தை ஒன்றின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் மருத்துவர்கள்.

 
 
மும்பை தானே பகுதியில் உள்ள மும்ப்ரா பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த மாதம் பிலால் என்ற மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த மாதம் 20-ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 
அந்த குழந்தையின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து வயிற்றினுள் இருக்கும் குழந்தையை எடுக்கவில்லை என்றால் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து என்பதால் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
 
அறுவை சிகிச்சை செய்த பின்னர் தற்போது குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், குழந்தையின் தாயும் நலமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வெளியில் எடுக்கப்பட்ட குழந்தை வெறும் 150 கிராம் மட்டுமே எடை இருந்துள்ளது. அது பரிசோதனைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
இரட்டை குழந்தையாக இருவரும் பிறக்க வேண்டியவர்கள் ஆனால் குறைப்பாட்டின் காரணமாக அந்த குழந்தையின் வளர்ச்சி பாதியிலேயே நின்றுள்ளது. வயிற்றினுள் இருந்து எடுக்கப்பட்ட அந்த குழந்தை 7 செ.மீ நீளமும் மூளை மற்றும் எலும்புகள் பாதி வளர்ந்த நிலையில் இருந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :