1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 5 டிசம்பர் 2014 (09:43 IST)

ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட வாலிபர்களை தாக்கிய பெண்களுக்கு வழங்கப்படவிருந்த விருது நிறுத்தம்

ஹரியனா மாநிலத்தில் ஓடும் பேருந்தில், தவறான முறையில் நடந்துகொண்ட வாலிபர்களை தாக்கிய சகோதரிகளுக்கு வழங்கப்படவிருந்த பரிசை அரசு நிறுத்தி வைத்துள்ளது.
 
ஹரியானா  மாநிலத்தைச் சேர்ந்த  பூஜா, ஆர்த்தி என்ற சகோதரிகள் இருவர் தங்களிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக கூறி, பேருந்தில்  பயணம் செய்த வாலிபர்களை வேண்டும் தங்களது பெல்ட்டால் அடித்தனர். இது அனைத்து ஊடகங்களிலும் பரவியது.
 
இந்த வீரச் செயலை பாராட்டி ஹரியானா மாநில முதல்–மந்திரி மனோகர் லால் கட்டார், சகோதரிகள் இருவருக்கும், வரும் குடியரசு தின விழாவின்போது கவுரவிக்கப்படுவார்கள் எனவும், அப்போது அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
 
முன்னதாக சகோதரிகள் இருவரிடம் மூன்று வாலிபர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் போலீஸ் விசாரணையின் போது இளைஞர்கள் மூவரும் தாங்கள் அப்பாவிகள் என்றும், இரு சகோதரிகளிடம் எவ்வித அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தனர்.
 
மேலும், பஸ்சில் பயனம் செய்த பெண்கள் சகோதரிகளுக்கு எதிராக சாட்சியம் அளித்து உள்ளனர். சோனிப்பட்டைச் சேர்ந்த விமலா என்ற பெண் கொடுத்துள்ள சாட்சியத்தில், ’உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டிருந்தார். அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த இந்த இரு சகோதரிகளிடம் அந்தப் பெண் அமர இடம் கொடுங்கள் என்று கூறினார். மேலும் டிக்கெட்டையும் காட்டினார்.
ஆனால் அவர்கள் எழுந்திருக்கவில்லை. மாறாக குல்தீப்பிடம் சண்டைக்குப் போய் விட்டனர். பின்னர் திடீரென பெல்ட்டை எடுத்து குல்தீப்பை அடிக்க ஆரம்பித்து விட்டனர். இதை ஒரு பெண் தான் வைத்திருந்த மொபைல் போனில் பதிவு செய்ய ஆரம்பித்தார். இந்த நிலையில் குல்தீப் பஸ்சிலிருந்து இறங்கி விட்டார்.
 

 
சகோதரிகள் இருவரும் காவல் துறையினரிடம், குல்தீப்பையும், அவருடன் வந்த மற்ற இருவரையும் சேர்த்து புகார் கூறினர். ஆனால் அந்த மூன்று இளைஞர்களுமே அப்பாவிகள், அவரக்ள் தவறு செய்யவில்லை என்று விமலா கூறியுள்ளார் விமலா. இதேபோல மேலும் 5 பெண்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில் 4 பேர் அந்த சகோதரிகளின் சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் அம்மாநில முதல்வர் கத்தாரை சந்தித்த மூன்று வாலிபர்களின் குடும்பத்தினர், இரு தரப்பையும் தீர விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது அவர், ’விசாரணை யாருக்கும் சாதகமாக இல்லாமல் நேர்மையாக நடைபெறும்’ என்று தெரிவித்தார்.
 
மேலும் சகோதரிகள் இருவருக்கும் வழங்கப்படுவதாக இருந்த விருதுகள் மற்றும் பரிசுத்தொகையை காவல்துறை விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.