வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2016 (14:31 IST)

ஏடிஎம் சேவைக் கட்டணம் ரத்து: ரிசர்வ் வங்கி அதிரடி

டிசம்பர் 30ம் தேதி வரை ஏடிஎம் சேவைக் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று வங்கி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.


 
 
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது சொந்த வங்கியின்றி, வேறு வங்கிகளுக்கு ஏடிஎம் மையங்களில் 4 முறை மட்டும் இலவசமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். 
 
அதற்குப் பின் வேறு வங்கியின் ஏடிஎம் கிளைகளை பயன்படுத்தினால், அதற்கேற்ப பிரத்யேக கட்டணங்களை வங்கி நிறுவனங்கள் வசூலிக்கும்.
 
இந்நிலையில், ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று, மத்திய அரசு அறிவித்ததால், மேலும், ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க, நாள் ஒன்றுக்கு ரூ.2500 என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தினசரி நாட்டு மக்கள் பணம் எடுக்க வேண்டியுள்ளது.
 
ஆனால், 4 முறைக்கு மேல் போனால், ஏடிஎம் கட்டணம் வசூலிக்கப்படலாம். இதனால், வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில்கொண்டு, ஏடிஎம் சேவைக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கும்படி, மத்திய அரசு பரிந்துரை செய்தது.
 
இதையேற்று, வரும் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகள் ஏடிஎம் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என, ரிசர்வ் வங்கி தற்போது, வங்கி நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.