வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 5 ஜூலை 2015 (18:57 IST)

’எங்களது தவறுகளே குஜராத் கலவரத்திற்கு காரணம்’ - வாஜ்பாய் வருத்தம் குறித்து ’ரா’ முன்னாள் தலைவர்

குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்திற்கு எங்களது தவறுகளே காரணம் என்று வாஜ்பாய் வருத்தம் தெரிவித்ததாக ’ரா’ அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.தவ்லத் தெரிவித்துள்ளார்.
 

 
பாஜக மூத்த தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இந்திய அரசின் உளவு அமைப்பான ’ரா’வின் தலைவராகவும், சிறப்பு அலோசகராகவும் பணியாற்றியவர் ஏ.எஸ்.தவ்லத். அவர் தற்போது 'வாஜ்பாய் காலத்தில் காஷ்மீர்' என்ற புத்தகத்தை எழுதி, வெளியிடப்பட உள்ளார்.
 
இந்நிலையில், இது குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அடல் பிகாரி வாஜ்பாய், ’2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்திற்கு எங்களது தவறே காரணம் என்று வாஜ்பாய் வருத்தம் தெரிவித்தார். சிலதவறுகளால் குஜராத் கலவரம் தனது அரசு கையாண்ட தங்களின் சில தவறுகளாலேயே குஜராத் கலவரம் ஏற்பட்டது’ என கூறியதாக குறிப்பிட்டுள்ள்ளர்.
 
2002ஆம் ஆண்டு குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அம்மாநில முதல்வராக இருந்தவர், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 1999-ம் ஆண்டைய காந்தகார் விமான கடத்தல் தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ளார் தவ்லத்.