கேரளாவில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்


Suresh| Last Updated: சனி, 2 ஏப்ரல் 2016 (13:07 IST)
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

 

 
பிரபல இந்தி செய்தித் தொலைக்காட்சி நிறுவனமாகிய நியூஸ் நேஷன். இது சமீபத்தில் தேல்தல் கருத்துக் கணிப்பை நடத்தியது.
 
அதன்படி, கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு 79 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், ஐக்கிய ஜனநாயக முன்னணி 63 தொகுதியிலும், பாஜக 2 தொகுதியிலும் வெற்றி பெறும் என்று பிரபல இந்தி செய்தித் தொலைக்காட்சி நிறுவனமாகிய நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
 
கேரள சட்டசபைக்கு தமிழகத்தைப் போலவே மே 16 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :