1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2015 (02:35 IST)

அப்துல் கலாம் மறைவு: நாடே சோகத்தில்...பெண்களுடன் டான்ஸ் ஆடிய அசாம் முதலமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்த சோகத்தில் நாடே கண்ணீர் வடிக்கும் தருணத்தில், அசாம் முதலமைச்சர் தருண் கோகாய் பெண்களுடன் குத்தாட்டம் போட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

அசாம், கோலகாட் மாவட்டத்தில், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அசாம் முதலமைச்சர் தருண் கோகாய் கலந்து கொண்டார். பின்பு, பெண் ஊழியர்கள் இருவருடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
இது குறித்து, அசாம் பாஜக தலைவர் சித்தார்த்த பட்டச்சார்யா கூறுகையில், சமீபத்தில்தான், முதலமைச்சர் அருண் கோகாயின் நெருங்கிய நண்பரும், முன்னாள் அமைச்சருமான பி.கே.ஹண்டிக் மரணமடைந்தார். அடுத்து, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரணமடைந்தார். ஆனால், இந்த துயரத்தில் பங்கு கொள்ளாமல், இங்கு முதலமைச்சர் பெண்களுடன் நடனமாடியும், கோல்ப் ஆடியும் பொழுதைக் கழிக்கிறார் என்று வார்த்தைகளால் வெளுத்து வாங்கினார்.
 
இந்த சம்பவம் குறித்து, அசாம் முதலமைச்சர் அருண் கோகாய் கூறுகையில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவுக்காக நாடே துயரத்தில் இருந்த போது, நான் டான்ஸ் ஆடியது தவறுதான். இதற்கான நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.