ஆசிஃபா கொலை வழக்கில் திடீர் திருப்பம் - ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

victim
Last Updated: திங்கள், 16 ஏப்ரல் 2018 (18:23 IST)
கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில்,  குற்றவாளிகள் நார்கோ சோதனைக்கு தயார் என்று கூறியதால், விசாரணையை ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா, கடந்த ஜனவரி மாதம் கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பல நாட்கள் பட்டினி போட்டு, மயக்க மருந்து கொடுத்து, தொடர்ந்து பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
 
ஒரு சிறுவன் உட்பட 8 பேர் இந்த கொடூர செயலை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் போலீஸாரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பலாத்கார சம்பவத்திற்கு எதிராக நாடே கொந்தளித்துள்ளது.
victim1
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 8 பேரும் கத்துவா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது குற்றவாளிகள் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனவும் வேண்டுமென்றால் (நார்கோ சோதனை)உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துங்கள் எனவும் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :