வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 21 ஜூன் 2015 (00:40 IST)

பாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் ஆசாராம் பாபு ஜாமீன் மனு 6 வது முறையாக தள்ளுபடி

பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல சாமியார் ஆசாராம் பாபு ஜாமீன் மனு 6 ஆவது முறையாக மீண்டும் தள்ளுபடி செய்யப்டபட்டது.
 

 
குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமம் உள்ளது.
 
சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயன் சாய் ஆகிய இருவரும், கற்பழிப்பு, சட்ட விரோதமாக தங்களை அடைத்து வைத்திருந்தனர் என்று சூரத்தை சேர்ந்த இரு இளம் பெண்கள் புகார் செய்து இருந்தனர். 
 
இதில், ஜோத்பூர் ஆசிரமத்தில் வைத்து இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கடந்த 2013 ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் பாபு  கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார். 
 
இதையடுத்து அவரது சார்பில் கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி 5 முறை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இவை அனைத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.
 
இந்நிலையில், ஜோத்பூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆசாராம் பாபு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கூடுதல் நீதிபதி மனோஜ் குமார் வியாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 
 
அப்போது, இது போன்ற குற்றச்சாட்டில் உள்ளவர்கள் ஜாமீன் பெற தகுதியற்றவர்கள் என  கூறி, அந்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.  ஆசாராம் பாபுவுக்காக பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி வாதாடினார் என்பது குறிப்பிடதக்கது.