செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 29 அக்டோபர் 2021 (08:33 IST)

மகனுக்கு ஜாமீன்: கண்கலங்கி நின்ற ஷாருக்கான்

மகனுக்கு ஜாமீன்: கண்கலங்கி நின்ற ஷாருக்கான்
போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்தது நாளைக்குள் வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பு.

 
போதை பொருள் கடத்தல் வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு கோரப்பட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இந்நிலையில் மீண்டும் ஜாமீன் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதை ஏற்றுக் கொண்டுள்ள மும்பை உயர்நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆர்யன் கான் மும்பை ஆர்தர் சாலை சிறையில் இருந்து வீடு திரும்ப உள்ளார். 
 
ஆர்யனுக்கு ஜாமீன் கிடைத்த தகவல் அறிந்து ஷாருக்கான் கண்கலங்கி தனது உதவியாளருக்கும் வழக்கறிஞருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த செய்தி வெளியானதும் ஷாருக்கான் இல்லம் அருகே ரசிகர்கள் பலர் கூடினர்.