1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : திங்கள், 21 ஏப்ரல் 2014 (13:14 IST)

அரவிந்த் கெஜ்ரிவாலை வெளியேற்றிய அமேதி பெண்கள்

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் குமார் விஷ்வாஸை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை அப்பகுதி பெண்கள் விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. 
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் குமார் விஷ்வாஸை ஆதரித்து அமேதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கருப்பு கொடி காட்டியும், அவருக்கெதிராக கோஷமிட்டும் பெண்கள் ஆம் ஆத்மி கட்சியினரை அங்கிருந்து விரட்டினர்.  
 
அமேதி தொகுதியில் மே மாதம் 7 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக வாக்கு சேகரிக்க அத்தொகுதிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சென்ற அவரது தொண்டர்கள் அங்கிருந்த பெண்கள் சுயஉதவி குழுவினரை ஆம் ஆத்மி தொப்பிகளை அணிய வற்புறுத்தியதாக தெரிகறது. 
 
இதனால் கோபமடைந்த பெண்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கருப்பு கோடி காட்டியும், அவருக்கெதிராக கோஷமிட்டும் ஆம் ஆத்மி கட்சியினரை அங்கிருந்து வெளியேற்றியதாக தெரிகிறது.
 
இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.