Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தாக்குதலை தொடங்கியது ரான்சம்வேர் வைரஸ்: 120 குஜராத் கணினி கோவிந்தா?


sivalingam| Last Modified செவ்வாய், 16 மே 2017 (05:52 IST)
ரான்சம்வேர் என்ற வைரஸ் இந்தியா உள்பட ஆசிய நாடுகளை நேற்று முதல் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக ஏற்கனவே கணினி நிபுணர்கள் எச்சரித்திருந்த நிலையில்  குஜராத் அரசுக்கு சொந்தமான 120 கணினிகளை இந்த வைரஸ் தாக்கியுள்ளதாகவும், இந்த தாக்குதல் காரணமாக கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் அனைத்தும் அழிந்துபோனதாகவும் குஜராத் அரசு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.


 


குஜராத் மாநிலத்தில் பாதிப்புக்குள்ளான கணினிகளில் இருந்த தகவல்கள் அனைத்தும் அழிந்துவிட்டதாகவும் எனினும் அந்த கணினிகளில் முக்கியமான தகவல் ஏதும் இல்லாததால் ஆபத்து எதுவும் இல்லை  என்றும் குஜராத் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் தனஞ்ஜெய் திவேதி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த வைரஸ் மேலும் பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கணினிகளும் தற்போதைக்கு அணைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதனால் குஜராத் மாநிலத்தில் ஒருசில  கலெக்டர் அலுவலக பணிகளும் முடக்கிவிடப்பட்டுள்ளதாக குஜராத்தின் மெஹ்சானா மாவட்ட கலெக்டர் அலோக் பாண்டே தெரிவித்தார்.

ஏற்கனவே கேரள பஞ்சாயத்து அலுவலகங்களில் உள்ள நான்கு கணினிகளை ரான்சம்வேர் வைரஸ் துவம்சம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :