வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By ilavarasan
Last Modified: சனி, 23 மே 2015 (16:51 IST)

பாஜக டெல்லியை மறைமுகமாக ஆள முயற்சிக்கிறது - கெஜ்ரிவால்

டெல்லி மாநிலத்தில் மறைமுக அரசை நடத்த பாஜக முயற்சி செய்வதாக கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி உள்ளார்.
 
டெல்லியில் உயர் அதிகாரிகளை நியமனம் செய்வது மற்றும் இடமாறுதல் செய்வதற்கான அதிகாரம் மாநில துணை நிலை கவர்னருக்கு மட்டுமே உள்ளது என்று நேற்று மத்திய அரசு அறிவித்தது.
 
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் கெஜ்ரிவால், இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இந்த அறிவிப்பின் மூலம் டெல்லி மக்களை மத்திய அரசு முதுகில் குத்திவிட்டது. மத்திய அரசு தனது அறிவிப்பின் மூலம் டெல்லி மாநிலத்தில் மறைமுகமாக தனது ஆட்சியை நடத்த முயற்சிக்கிறது. தனது கட்சியின் 3 எம்.எல்.ஏ.க்கள் மூலம் பின்புற வாசல் வழியாக டெல்லியில் ஆட்சியை நடத்த விரும்புவதை பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு அம்பலப்படுத்துகிறது.
 
ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், மத்திய அரசும், பாஜகவும் அச்சம் அடைந்துள்ளதையே இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. மத்திய அரசு அதிகாரிகள் மீது லஞ்ச தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறுவதன் மூலம் ஊழல் அதிகாரிகளை பாதுகாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இது டெல்லி மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும்" என்றார்.