வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 22 மே 2015 (21:24 IST)

கவர்னர் ஜங், மோடியின் வெற்றி: கெஜ்ரிவால் காட்டம்

கவர்னர் ஜங், மோடியின் வெற்றி என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்தார். 
 
மத்தியில் அனைத்து அதிகாரங்களும் கவர்னருக்கு தான் உண்டு என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளித்தார். அப்போது கவர்னர் ஜங், மோடியின் வெற்றி என முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். 
 
மேலும் டெல்லியில் அனைத்து நியமனங்களையும் கட்டுப்படுத்த பாஜக முயற்சி செய்வதாகவும் அவர் புகார் கூறினார். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் டிரான்ஸ்பர் முறைகேட்டை கட்டுப்படுத்தியுள்ளோம் என்றும் செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லி கவர்னர் ஜங்குக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பலத்த மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.