ஹரியானாவில் வெடித்துச் சிதறிய ஆப்பிள் ஐபோன்


K.N.Vadivel| Last Updated: ஞாயிறு, 28 ஜூன் 2015 (06:03 IST)
ஹரியானாவில் கிஷன் என்பவர் தனது அப்பிள் ஐபோன் 6 ல் பேசிக் கொண்டிருந்த போது, அந்த போன் வெடித்துச் சிதறியுள்ளது.

 

ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கானை சேர்ந்த உணவக உரிமையாளர் கிஷன் என்பவர் தனது காரில் ஆப்பிள் ஐபோன் 6 ல் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
 
அப்போது திடீரென போனில் இருந்து தீப்பொறி வெளிப்பட்டதை பார்த்த அவர், உடனே போனை வெளியில் தூக்கி எறிந்துள்ளார். அடுத்த சில வினாடிகளில், அந்த போன் வெடித்து சிதறியுள்ளது. மேலும் கிஷனின் கட்டை விரலில் சிறிய அளவில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
 
உடனே, இது குறித்து, கிஷன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறைையினர் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
ஆப்பிள் ஐபோன் வெடித்துச் சிதறிய சம்பவம் ஹரியானா மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :