1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (00:28 IST)

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை: பிரச்னையை மூடி மறைக்க தமிழக அரசு முயற்சி - வைகோ குற்றச்சாட்டு

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அப்பிரச்னையை மூடி மறைக்க தமிழக அரசு முயற்சி செய்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
ஆந்திராவில், செம்மரம் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி, 20 தமிழர்களை அம்மாநில வனத்துறை சுட்டுக் கொலை செய்தனர்.
 
இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுக அமைப்புகளும் தொடர்ந்து கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன், உச்ச கட்டமாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில்  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
 
இந்த உண்ணாவிரதப் போட்டத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ஆர்.முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.
 
இந்த உண்ணணாவிரதப் போரட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:
 
ஆந்திராவில், செம்மரம் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி, 20 தமிழர்களை அம்மாநில வனத்துறை சுட்டுக் கொலை செய்த சம்பவத்தை கண்டித்து, தமிழகத்தில் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுக அமைப்புகளும் தொடர்ந்து கடும் போராட்டம் நடத்தி வருகின்றோம்.
 
ஆனால், இந்த போராட்டத்தில் உள்ள நியாயத்தை தமிழக அரசு மதிக்கவில்லை. குறிப்பாக, மிதிக்காமல் இருந்தால் பரவாயில்லை.
 
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி அனைத்துக் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. பிரச்னையை மூடி மறைக்க தமிழக அரசு முயற்சி செய்கிறது. இந்த பிரச்சனையை தட்டிக்கழிக்க முயற்சி செய்து வருவதாக அஞ்ச நேரிடுகிறது.
 
எனவே, இந்த விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்க ஆந்திர அரசிற்கு, தமிழக அரசு கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும் . இல்லை எனில், மக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்த வேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்தார்.