வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Muthukumar
Last Modified: சனி, 19 ஏப்ரல் 2014 (10:11 IST)

ஊழலுக்கு எதிராகப் போராடியவர் அநியாயமாகச் சுட்டுக்கொலை!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஊழலை எதிர்த்து செயல்பட்டு வந்த 70 வயது நபரை மர்ம ஆசாமிகள் அநியாயமாக சுட்டுக் கொலை செய்தது பெரும் பரபரப்பாகியுள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலம் பாங்கன்டா கிராமத்தை சேர்ந்தவர் மங்கட் தியாகி. 70 வயதான இவர் பல்வேறு அரசு துறைகளில் நடைபெறும் ஊழல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிஉலகுக்கு கொண்டு வந்தவர். 
 
சுமார் 14 ஆயிரம் தகவல் அறியும் விண்ணப்பங்களை அனுப்பியிருக்கிறார். கடந்த 14-ந்தேதி அவர் தனது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது, ஒரு காரில் அங்கு வந்த 3 பேர் மங்கட்டை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இதில் மங்கட் பரிதாபமாக உயிர் இழந்தார். 
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த வழக்கு விசாரணையை சிறப்பு அதிரடிப்படைக்கு மாற்றினர். 
 
அதோடு மங்கட் குடும்பத்தினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பும் வழங்கியுள்ளனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, மங்கட் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்துள்ள ஊழல் அதிகாரிகளின் பட்டியலை ஆராய்ந்து வருகிறோம். இதில் சில முக்கியமான துப்பு கிடைத்துள்ளது. எனவே விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றார்.