ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (13:14 IST)

ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞர்: அட்ரஸ் கேட்டு செருப்படி கொடுத்த பெண்!

beat
ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞர்: அட்ரஸ் கேட்டு செருப்படி கொடுத்த பெண்!
ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞரின் அட்ரஸை கேட்டு அவருடைய வீட்டிற்கு வந்து இளம்பெண் ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திராவை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆபாச மெசேஜ் அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம் பெண் அந்த மெசேஜின் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு அதன் பிறகு அவருடைய மொபைல் எண்ணை கண்டுபிடித்து அதிலிருந்து அவரது வீட்டு அட்ரஸ் கண்டுபிடித்தார். 
 
அதனை அடுத்து அவரது வீட்டுக்கே வந்த அந்த இளம்பெண் அந்த இளைஞரை பிடித்து செருப்பால் அடித்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த பெண்ணை சமாதானம் செய்ய முயன்ற போது இந்த நபர் தனக்கு ஆபாசம் மெசேஜ் அனுப்பிதாகவும் அதனால இவனை சும்மா விடமாட்டேன் என்றும் கன்னத்தில் மாறி மாறி செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 
Edited by Mahendran