வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (12:19 IST)

ஆந்திர மாநிலத்துக்குப் புதிய தலைநகரம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திர மாநிலத்துக்குப் புதிய தலைநகராக விஜயவாடாவை அதிகாரப்பூர்வைமாக அறிவிக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதன் எதிரொலியாக தெலங்கானா மாநிலம் உருவானது. இதனால் இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக ஐதராபாத் உள்ளது.

இதனால் ஆந்திரா மாநிலத்துக்குப் புதிய தலைநகரை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஆந்திர அரசு.

இந்நிலையில் புதிய தலைநகரை எங்கு அமைப்பது என்பது பற்றி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர்களுடனும்  தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டார். முடிவில் விஜயவாடாவில் புதிய தலைநகரை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விஜயவாடா நகரைச் சுற்றி 3 நகரங்கள் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைக்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிடுகிறார்.

மேலும் இதற்கான மத்திய அரசு ஒப்புதல் கிடைத்ததும் விஜயவாடாவை நவீனப்படுத்தும் பணி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. புதிய தலைநகருக்கான நகரங்கள் விஜயவாடா – குண்டூர் இடையே அமையும் என்று கூறப்படுகிறது.