வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 26 ஜூலை 2015 (02:30 IST)

ஆந்திராவுக்கு விரைவில் சிறப்பு அந்தஸ்து: சந்திரபாபு நாயுடு நம்பிக்கை

ஆந்திராவுக்கு விரைவில் சிறப்பு அந்தஸ்து  கிடைக்கும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

 
ஆந்திராவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திராவுக்கு சிறப்பு  அந்தஸ்து வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், சிறப்பு அந்தஸ்தை பெறுவதற்கு, சந்திரபாபு நாயுடுவுக்கு போதிய அக்கறை செலுத்துவில்லை என்றார்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராஜமுந்திரி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-
 
ஆந்திராவுக்கு சிறப்பு  அந்தஸ்து பெற வேண்டும் என்ற சம்பவமே இப்போதுதான், எதிர்க்கட்சிகளின் நினைவுக்கு வந்துள்ளது போலும். இதற்காக நான் இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், எதிர்க்கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது. இதை அனுமதிக்க முடியாது.
 
மேலும், தெலுங்கு பேசும்  மக்கள், இப்போது இரு மாநிலங்களை பெற்றுள்ளனர். மத்திய அரசின்  முழு ஆதரவோடு ஆந்திராவின் தலைநகர் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆந்திராவுக்கு விரைவில் சிறப்பு அந்தஸ்து கிடைத்துவிடும். அதற்கான அனைத்து முயற்சிகளிலும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது என்றார்.