குளிர்காலக்கூட்டத் தொடரை பாஜகவுக்கு புயலாக மாற்ற ஆந்திர முதல்வர் பக்கா ப்ளான்!

Last Modified சனி, 14 ஜூலை 2018 (14:56 IST)
ஆந்திராவிடம் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட போது, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறிவிட்டது மத்திய அரசு.  
 
இதனால், ஆத்திரமடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜகவுடனான தெலுங்கு தேச கட்சியின் கூட்டணியை முறித்துக்கொண்டார். அதோடு, மோடியையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.   
 
இதற்கிடையே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக மூன்றாவது தேசிய கட்சியை உருவாக்கும் முயற்சி நடந்துவருகின்றன. இந்த முயற்சியில் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
இதனையடுத்து பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், காவிரி விவகாரத்தில் அதிமுகவினர் தொடர் அமலியில் ஈடுப்பட்டு வந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனது. 
 
இந்நிலையில் மீண்டும் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர ஆந்திர முதல்வர் முடிவுசெய்துள்ளாராம். அதன்படி விரைவில் நடக்கவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரின் போது செயல்படுத்த சில திட்டங்களை தீட்டியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :